Wednesday, November 25, 2009

Phase IV Training Photos

7வது திருமலை சாரணர் குழு 2009

7வது திருமலை சாரணர் குழு

எமது பாடசாலையில் 15.06.1983 அன்று தொடங்கப்பட்ட எமது சாரணர் குழு பல சாதனைகளை படைத்து 2009ம் ஆண்டில் கால் பதித்து இவ் வருடத்திலும் பல சேவகைள் சாதனைகளை படைத்திருக்கின்றது. அவற்றை ஒரு முறை மீட்டிப்பார்ப்பதில் பெருமையடைகின்றோம்

இவ்வருடத்தின் முதலாவது சேவையாக 29.01.2009 அன்று நடைபெற்ற எமது பாடசாலையின் விளையாட்டுப்போட்டி அமைந்தது. அடுத்ததாக 08.02.2009 அன்று திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்திற்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது சாரணர்கள் கலந்துகொண்டு அலுவலக உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். எமது பாடசாலையின் 31வது வருடநிறைவு 10.02.2009 அன்று கொண்டாடப்பட்ட போது அதில் எமது சாரணர்களில் இருவர் மாவட்ட ஆணையாளர் கட்டிழையும், ஐந்து சாரணர்கள் சாரணவிருதும் பெற்றுக்கொன்டனர். தொடர்ந்து 14-17.02.2009வரை நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொன்டு தமது சேவையினை வழங்கினர்.

மேலும் எமது சாரணீயத்தின் தந்தையின் பிறந்ததினத்தையொட்டி மாவட்ட சாரணர் சங்கத்தினால் சென் ஜோசப் கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் எமது சாரணர்கள் கலந்து சிறப்பித்தனர். தொடர்ந்து 29.03 - 09.04.2009 வரை திருகோணமலை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சாரணர்கள் கடமையில் ஈடுபட்டனர்.

18.05.2009 அன்று பாடசாலையின் காலைக்கூட்டத்தை இரண்டாவது தடவையாக எமது சாரணர்கள் பொறுப்பேற்று சிறப்பாக நடாத்தினர். இந் நிகழ்வு வினைத்திறன் அலங்கார கட்டிழை வழங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எமது துருப்பைச் சேர்ந்த செல்வன். இ.திருக்குமரன், செல்வன். சி.ஹயக்கிரீவன், செல்வன். சி.மேனன் ஆகியோர் இவ் வினைத்திறன் அலங்கார கட்டிழையினை பெற்றனர். இதில் எமது சாரணர்களால் பல கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டது. தொடர்ந்து 29-30.05.2009 வரை நடைபெற்ற விவசாயக்கண்காட்சியில் எமது சாரணர்களின் கடமை வழங்கப்பட்டது.

06.06.2009 ஒரு நாள் பாசறை நடைபெற்றது. இதில் பாத்திரமின்றி சமைத்தல் , கட்டுக்கள் , விசில் சமிஞ்ஞைகள் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாலை அதிபர் தலைமையில் பெற்றோர் கூட்டமும், பாசறைத்தீ வைபவமும் நடைபெற்றது. அடுத்து 13 - 28.08.2009 காலப்பகுதியில் வருடாந்த நட்புறவு வாரம் கொண்டாடப்பட்டது. இதில் எமது சாரணர்கள் 81427.00 சேமித்து மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டனர். 2008ஆம் ஆண்டிலும் நாம் முதலிடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. 04.07.2009 சாம்பல் தீவில் சிரமதானம் ஒன்றினையும் 18.07.2009 6,7,8 வகுப்புகளுக்கான கணிதம், ஆங்கிலம் பாடத்துக்கான செயலமர்வு ஒன்றினையும் அணித்தலைவர்சபை தலைமையேற்று நடாத்தியது. இதில் கணித பாடத்திற்கான வளவாளராக எமது உதவி சாரணதலைவர் திரு. கி.சதீஸ்குமார் அவர்களும், ஆங்கில பாடத்திற்கான வளவாளராக பெண் சாரணதலைவர் திருமதி. ஜோன் தேவதாசும் பங்கேற்றனர். 03.09.2009 தொடக்கம் 06.09.2009 வரை பாசறை ஒன்றை அமைத்து மாவட்ட கம்போறிக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

01.10.2009 தொடக்கம் 05.10.2009 வரை நடைபெற்ற கம்போறியில் கலந்து கொன்ட எமது சாரணர்கள் அனைத்து விருதுகளையும் பெற்றுக்கொன்டனர் சிறந்த கம்போறி குழு, திருகோணமலை சிறந்த துறுப்பு, வேலைவாரம், சமூக சேவை, நிலைக்காட்சி(யுசநயெ னுiளிடயல) ஆகியவற்றில் முதலாவது இடத்தையும், சிறந்த சாரணத்தலைவர் கையேடு எமது சாரணத்தலைவர் சி. விவேகானந்தனும் சிறந்த சாரணர் கையேடு எமது துறுப்பைச்சேர்ந்த செல்வன் சி. இந்துஜனும் பெற்று எமது துறுப்பு வரலாற்று சாதனை புரிந்தது.

26.10.2009 தொடக்கம் 02.11.2009 வரை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற சாரணத்தலைவர்களுக்கான கலைக்கூறு நான்கில் எமது சாரணத்தலைவர்கள் சி. விவேகானந்தன், வே. தவராசா, கி. சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொன்டனர்.

எமது குழுவில் நெடுங்காலமாக இருந்த குறையான குருளைச்சாரணியம் மற்றும் பெண்கள் சாரணியம் இல்லாமையினை 15.11.2009 அன்று எமது குழுவில் இனைந்து கொன்ட உதவி சாரணத்தலைவர் கா.சிந்தியா, ஆக்கேலா வி.நிருசிகா ஆகியோரால் தீர்த்து வைக்கப்பட்டது. மற்றும் எமது பாடசாலையை சேர்ந்த இரு சாரணர்கள் 13.12.2009 அன்யு ஒருவார பாசறைக்காக இந்தியா செல்ல ஆயத்தமாகவுள்ளனர் எனபதையும் இவ்வேளையில் நினைவுகொள்ளத்தக்கது.

சாரணத்தலைவர், உதவி சாரணத்தலைவர்கள்,
சாரணர்கள், குருளைச் சாரணர்கள்.

Wednesday, November 11, 2009

Wednesday, November 4, 2009