Monday, October 19, 2009

சாரணர் பாடல் 3 (ஆங்கிலம்)

If You're Happy And You Know It

If you're happy and you know it, clap your hands!
If you're happy and you know it, clap your hands!
If you're happy and you know it,
And you really want to show it,
If you're happy and you know it, clap your hands!
If you're happy and you know it, stamp your feet!
If you're happy and you know it, stamp your feet!
If you're happy and you know it,
And you really want to show it,
If you're happy and you know it, stamp your feet!
If you're happy and you know it, shout hooray!
If you're happy and you know it, shout hooray!
If you're happy and you know it,
And you really want to show it,
If you're happy and you know it, shout hooray!
If you're happy and you know it, do all three!
If you're happy and you know it, do all three!
If you're happy and you know it,
And you really want to show it,
If you're happy and you know it, do all three!

Thursday, October 15, 2009

பாசறை தீ பிரமாணம்



இத் தீயானது எரிந்து சுடர் விட்டு பிரகாசிப்பது போல்
எமது நல்ல நோக்கங்களும் எண்ணங்களும் பிரகாசிப்பதாக,
முடிவில் இத் தீயானது எரிந்து சாம்பலாகுவது போல்
எமது தீய நோக்கங்களும் எண்ணங்களும் சாம்பலாகுவதாக.

சாரணர் பாடல் 2

மழையை நம்பி ஏலேலோ

மழையை நம்பி ஏலேலோ
மண்ணிருக்க - அயிலசா
மண்ணை நம்பி ஏலேலோ
மரமிருக்க- அயிலசா
மரத்தை நம்பி ஏலேலோ
கிளையிருக்க - அயிலசா
கிளையை நம்பி ஏலேலோ
கொம்பிருக்க - அயிலசா
கொம்பை நம்பி ஏலேலோ
ர்லையிருக்க - அயிலசா
ர்லையை நம்பி ஏலேலோ
பூவிக்க - அயிலசா
பூவை நம்பி ஏலேலோ
பிஞ்சிருக்க - அயிலசா
பிஞ்சை நம்பி ஏலேலோ
காயிருக்க - அயிலசா
காயை நம்பி ஏலேலோ
கனியிருக்க - அயிலசா
கனியை நம்பி ஏலேலோ
நானிருக்க - அயிலசா
என்னை நம்பி ஏலேலோ
நீயிருக்க - அயிலசா அயிலசா அயிலசா

இலங்கை சாரணிய வரலாறு




1912 - கிறிஸ்தவ கல்லூரி மாத்தளையி;ல் எப்.ஜீ.சற். ஸ்ரீபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
1915 - 248 சாரணர்கள்.
1917 - முதல் சாரணர் விழா – கவலக் குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெற்றது.
1918 - முதன் முதல் திரிசாரணக்குழு ஒன்று இலங்கையில் உருவாக்கப்பட்டது.
1919 - கோ. புறூக் எலியத் - இலங்கையின் பிரதம ஆணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பேடன் பவல் பிரபுவும் அவரது பாரியாரும் இலங்கைக்கு முதல் தடவை விஜயம் செய்தனர்.
1924 - இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சாரணர் இயக்கம் புகுத்தப்பட்டது.
1925 - வேணன் கிறேனியர் என்பவர் பிரதம ஆணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1930 - திரு.ஜே.எச்.டி. சேரம் என்பவர் பிரதம ஆணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1931 - களுத்துறை சாரணி கொல்னி ஆரம்பம்.
1934 - பேடன் பவல் இரண்டாம் தடவை இலங்கைக்கு வருகை.
1939 - முதலாவது கொழும்புத் துறைமுக திரிசாரணர்களுக்காக ஜேபைமார்க்கா ஞாபகார்த்தக் கட்டிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
1941 - வாவித்தெரு, காலிமுகத்திலுள்ள உறாஜி அப்துல் உறறீம் கட்டிடமும் அத்துடன் கூடிய உறபிற்றர் ஞாபகார்த்தக் கட்டிடமும் கொழும்புப் பகுதி சாரணியின் தலமைப்பீடமாக்கப்பட்டது.
1942 - சாரணரின் பயிற்சிக் கூடம் இராணுவத்தினரால் எடுக்கப்படவே, பயிற்சிக் கூடம்
மீரிகமவிற்கு மாற்றப்பட்டது.
1943 - கே. சோமசுந்தரம் சி.சி.எஸ். அவர்கள் பிரதம ஆணை அதிகாரியாக
நியமிக்கப்பட்டார்.
1945 - தேசிய தலைமைச் செயலகம் தற்போதைய கட்டிடத்திற்கு வந்தது. வெளிக்கள ஆணையாளர்கள் சேவை ஆரம்பம்.
1949 - கேணல் சி.வி. ஜெயவர்த்தன ஓ.பி.இ. பிரதம ஆணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1951 - இலங்கைச் சாரணரின் கணக்கெடுப்பு 9,348.
1957 - இங்கிலாந்து உலக சம்மேளனத்திலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் அங்கத்துவம் பெற்றது.
1962 - தேசிய ஜம்பொறி குதிரைப்பந்தயத்திடல், கொழும்பு.
1972 - தேசிய பொன்விழா – கண்டி போகம்பர மைதானம்.
1983 - மூன்றாவது தேசிய ஜம்பொறி – அனுராதபுரம்.
1987 - றெக்ஸ் ஜயசிங்க பிரதம ஆணையாளர்.
1990- முதலாவது சார்க் நாடுகளுக்கிடையிலான ஜம்பொறி விகாரமகாதேவி பூங்கா,கொழும்பு.
1992 - நான்காவது தேசிய ஜம்பொறி – குருணாகலை
1994 - எம்.எம். மொகைதீன் பிரதம ஆணையாளர்.
1997 - எம்.எம். மொகைதீன் காலமானார்.கே.எச். கமிலஸ் பெர்ணான்டோ பிரதம ஆணையாளர்.
1998 - ஐந்தாவது தேசிய ஜம்பொறி பல்லேகல – கண்டி.சுமார் 5500 சாரணர்கள்.

றொபேர்ட் ஸ்ரீவின்சன் சிமித் பேடன் பவல் பிரபு


சாரண ஸ்தாபகர்

றொபேர்ட் ஸ்ரீவின்சன் சிமித் பேடன் பவல் பிரபு. இவரது தந்தையார் எவ்.ஜி. பேடன் பவல், ஓர் மதகுருவும் விஞ்ஞானியுமான இவர் ஒக்ஸ்போட் சர்வகலாசாலை பேராசிரியர் ஆவார். தாய் விஞ்ஞானி அட்மிரல் வில்லியம் ரி சிமித்தின் மகள். 6, ஸ்ரன்கோப் வீதி, லண்டன் -2 இல் 22.02.1857 இல் பேடன் பவல் ஒன்பது பிள்ளைகளுள் எட்டாவதாக ஆறாவது ஆண்மகனாக பிறந்தார். மூன்றாவது வயதில் தந்தையை இழந்தார். இளமையில் கல்வியில் நாட்டம் குன்றியவராயிருந்தாலும் பிறதுறைகளில் சிறந்து விளங்கினார். 1870 இல் பன்னிரண்டு வயதில் சாட்டர்சவுஸ் கல்லூhயில் உபகாரச் சம்பளம் பெற்று உயர் கல்விக்காகச் சேர்ந்தார். இவர் வன வாழ்க்கை, பாசறை வாசம், நீந்தல், படகு ஓட்டுதல், வேட்டையாடுதல் போன்ற வெட்டவெளி வாழ்க்கையில் மிகவும் வல்லவராகத் திகழ்ந்தார். 19 வயதில் தனது பட்டப் படிப்பை முடித்துக்கொண்டு இராணுவத்தில் குதிரைப் படையில் சேர்ந்தார்.

தனது இராணுவ சேவையினை இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் செய்தார். தனது திறமையினால் 25 வது வயதில் தளபதியானார். இக் காலத்தில் மிருக வேட்டையில் மிகவும் திறமைசாலியாக பன்றிவேட்டைப் பரீட்சை பெற்றார். 1887 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் சூலவம்ச சுதேசிகளுக்கிடையிலான யுத்தத்திலும் சிறந்த வல்லுனராகத் திகழ்ந்தமையால் சுதேசிகள் இவரது திறமையைப் பாராட்டி “இம்பீசா” என்ற பட்டத்தைச் சூட்டினர். இதன் பொருள் என்றும் துயில் கொள்ளாத ஓநாய் ஆகும். 1897 இல் குதிரைப்படைத் தளபதியானார். 1899 இல் கேர்ணலான இவர் திறான்ஸ்வால் குடியரசுப் போரில் 13.10.1899 இல் தென்னாபிரிக்காவில் மேப்கிங் நகரை எதிர்ப்படைகள் முற்றுகையிட்டபோது தனது திறமையாலும் சிறுவர்களைப் பழக்கி ஒற்று அறிவதன் மூலமும் தனது சிறிய படையுடன் உதவி கிடைக்கும் வரை 217 நாட்களுக்கு மேப்கிங் நகரைப் பாதுகாத்து வெற்றி வீரராகத் திகழ்ந்தார். மேஜர் ஜெனரலாகப் பதவியுயர்வு பெற்றார். 1901 இல் தாயகம் திரும்பினார். இராணுவ சேவைக் காலத்தில் கிடைத்த அனுபவத்தினைக் கொண்டு சாரணியத்திற்கான துணை எனும் நூலை எழுதினார். மக்களிடம் இந் நூல் பெரும் மதிப்புப் பெற்றிருந்தது. முதியவர்களுக்கான இந் நூல் சிறுவர்களிடமும் பெரும் மதிப்பு பெற்றது.

இக்கால வாழ்க்கையில் சிறார்கள் துணிகரச் செயலிற்கும், எதிர்கால வாழ்விற்கும் சிறந்த வல்லுனர்கள் என்பதனை உணர்ந்தார். 1903 இல் இவரது நூலை வாசித்த பெரியோர்களினது வேண்டுகோளினை ஏற்ற இவர் 1907 இல் இங்கிலாந்துக் கல்லூரியிலுள்ள பிறவுன்சி தீவில் 20 பேர் கொண்ட முதலாவது மாதிரிச் சாரணர் பாசறையை நடாத்தி வெற்றிகண்டார். 1908 ஆம் ஆண்டு முற்பகுதியில் “இளைஞர் சாரணியம்” எனும் நூலை ஆறு பிரசுரங்களாக வெளியிட்டார். 1909 ஆம் ஆண்டு இவரது சகோதரி அக்னஸ் முதன் முதல் சாரணியத்தில் சேர்ந்து கொண்ட பெண் ஆவார். 1910 ஆம் ஆண்டு பெண்களுக்கென வழிகாட்டிகள் இயக்கத்தை ஆரம்பித்தார். கிங் எட்லேட்டின் ஆலோசனைக்கு ஏற்ப இராணுவ சேவையிலிருந்து விலகினார். 1912 ஆம் ஆண்டு உலக நாடுகளுக்கான சாரணர் சுற்றுப் பயணத்தை உலக சாரணர்களைச் சந்திப்பதற்காக மேற்கொண்டார். முதலாவது உலக யுத்தம் தடையாக அமைந்தது.

தென் அமெரிக்காவில் யமோக்காவில் சதாம்ரன் துறைமுகத்தில் பேடன் பவலிற்கு சாரணர் அளித்த அணிவகுப்பு மரியாதையினை ஏற்கும் போது கப்பற் சிப்பந்திகளின் வேலை நிறுத்தம் காரணமாக அதே கப்பலில் பிரயாணம் செய்த தகப்பனார் சென் கிளபர்சோம்ஸ் உடன் இருந்த மகள் ஒலெவ் முதன் முதல் பேடன் பவலைக் கண்டார். இவர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கும், தென்னாபிரிக்காவுக்கும் உல்லாசப் பிரயாணிகளாக இறுதிநேர இருக்கை வசதி கிடைத்ததனால் பிரயாணம் செய்தனர். சென்கிளெயரின் மூன்றாவது பிள்ளையான இவர் 22.02.1889 இல் பிறந்தார். இவரும் வெட்டைவெளி வாழ்க்கையிலும், உல்லாசப்பிரயாணம் செய்வதிலும் பிரியர். 30.01.1912 இல் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி யமேக்காவில் இரகசியப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். புரட்டாதி மாதம் இங்கிலாந்திற்கு பேடன் பவல் திரும்பி வந்து உத்தியோகபூர்வமாக திருமண விடயத்தை அறிவித்தார். 30.10.1912 இல் பாக்ஸ்ரன்பூல் இங்கிலாந்திலுள்ள சென்பீற்றர் சேச்சில் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு மகனும், இரு மகளுமாவார். மகன் பீற்றர் பேடன் பவல். பேடன் பவலிற்குப் பின்னர் தாயுடன் சேர்ந்து உலகப் பிரதம சாரணராக 1963 இல் இறக்கும் வரை பணியாற்றினார். இவரது மனைவி பற்ரியென்ஸ். கீதர், பெற்ரி ஆகிய இருவரும் மகளாவார்.

1916 இல் குருளைச் சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்.
1918 இல் திரிசாரண இயக்கத்தை ஆரம்பித்தார்
1919 இல் கில்வெல் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
1920 இல் ஒலிம்பியாவில் நடைபெற்ற உலகச் சாரணர் ஜம்பொறியில் உலகப் பிரதம சாரணராக 06.08.1920 இல் நியமிக்கப்பட்டார்.
1929 இல் பேடன் பவலிற்கு 3 ஆவது உலகச் சாரணர் ஜம்பொறியில் கில்வெல்
பேடன் பவல் பிரபு என்ற பட்;டம் 3ம் ஜோர்ஜ் மன்னனால் வழங்கப்பட்டது. இவ்வாண்டு 20 இலட்சம் சாரணர் இருந்தனர்.
1930 இல் திருமதி பேடன் பவல் உலகப் பிரதம சாரணியாக நியமனம்
செய்யப்பட்டார். இவர் தனது உரையில் என்னால் இயன்ற வரை திறமையாளர் எல்லோருக்கும் எவ்விடத்திலும் பணிசெய்வேன் என்றார்.
1938 ஆம் ஆண்டு தனது 80வது வயதில் இறுதி வாழ்க்கையைக் கழிக்க தன் வாழ்நாளில் மிகப் பிரியமான இடமாகிய ஆபிரிக்காவிலுள்ள கென்யாவிலுள்ள நைஜீரி என்ற இடத்திற்கு சீமாட்டி பேடன் பவலுடன் சென்று வாழ்ந்தார். தனது 80 வயதில் சாரணர் இயக்கம் நன்கு பலமடைந்துவிட்டது அது தானாக வளரும் நான் ஒன்றுமினிச் செய்ய வேண்டியதில்லை என்றார். 08.01.1941 இல் காலமானார். அவரை ஆபிரிக்காவில் மவுண்ட் கெனியாவின் அடித்தளத்திலுள்ள நைஜீரியின் சிறிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவருக்குப் பின் இவரது பணியினை கணவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் 111 நாடுகளுக்கு 654 விமானப் பிரயாணங்களை மேற்கொண்டு 5 இலட்சம் மைல்கள் சென்று சிறிய தூரத்தினை மோட்டார் வாகனம் மூலமும் மேற்கொண்டு சாரண, சாரணிய இயக்கத்தை வளர்த்தார். இவர் “றீடேர்ஸ் டை ஜெஸ்ற்” என்ற பத்திரிகைக்கு பேட்டி அளிக்கும் போது தன் வாழ் நாளில் சாரணிய சீருடையுடன் இருக்கும் போது உள்ள மகிழ்ச்சியை வேறு எச்சந்தர்ப்பத்திலும் அனுபவிக்கவில்லை என்றார்.

இவர் தனது உலகப் பயணங்களின் போது :

1932 இல் சுவிற்சிலாந்தில் அடல்பொடினில் “எங்கள் சலற்” ரையும்,
1939 இல் இலண்டனில் “எங்கள் ஆக்” கையும்,
1957 இல் மெக்சிக்கோவில் “எங்கள் கபானா” வையும்,
1966 இல் இந்தியாவில் பம்பாயில் புனாவில்சங்கம் பாசறையும் திறந்து வைத்தார்.
1973 இல் “செரஸ் மெடல்” எனும் சிறந்த பெண்விருதினைப்பெற்றார்.

தனது கணவனின் பணியை 60 வருட தலைமைத்துவத்தில் நிறைவேற்றிய இவர் 1974 இல் வைத்தியர்களின் கட்டாய நிர்ப்பந்தத்தின் பிரகாரம் முதுமையாலும், நீரிழிவு நோயினாலும் கம்ரன் கோட்டிலுள்ள தனது வாசல்த்தலத்திலிருந்து வெளியேறி கில்பேட்டிலுள்ள நலன் பேணும் விடுதியில் தங்கியிருந்தார். அங்கும் அவர் தனக்குக் கிடைக்கும் பலதொகைக் கடிதங்களுக்கு தனது எடுத்துச் செல்லும் தட்டச்சு இயந்திரம் மூலம் பதில் அனுப்பிய வண்ணம் இருந்தார். 25.06.1977 இரவு 11.45 மணியில் நித்திரையில் காலமானார். இங்கிலாந்தில் மரணச்சடங்கு நடைபெற்றாலும் இவரது ஆஸ்தி கணவனின் புதைகுழியில் ஆபிரிக்காவில் கலக்கப்பட்டது.


பேடன் பவல் வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டியது.

01. பிள்ளைப்பாசம், தாய்ப்பாசம், சகோதரத்துவ ஒற்றுமை. (குடும்ப கஸ்டங்களை மறந்த நிலையை உருவாக்கியது)
02. சகல துறையிலும் ஆற்றல், கல்வியை உரிய காலத்தில் பெற்றமை.
03. மண், நாட்டுப்பற்று.
04. எடுத்தகருமத்தை செவ்வனே செய்து முடிப்பது.
05. குடும்பமே சாரணியத்துடன் தொடர்புடையதாக செயற்பட்டமை.
06. இராணுவ வாழ்க்கையின் பின்னர் சாரணியத்தின் மூலம் நாட்டுப் பற்றுள்ள சந்ததியையும், நற்பிரஜை கொள் சமுதாயத்தையும் உருவாக்க வழிவகுத்தார்.

உலக சாரண சங்கத்தின் சரிதையில் சில முக்கிய நிகழ்ச்சிகள்



1907 - முதல் பாசறை பிரவுன்சி தீவில் நடைபெற்றது.
1908 - மாணவர்களுக்கு சாரணியம் என்ற நூல் பிரசுரிக்கப்பட்டது.
1909 - கிரஸ்டல் மாளிகையில் 10,000 சாரணர்களின் கூட்டம் கடற்சாரணியம்
ஆரம்பிக்கப்பட்டது.
1911 - வின்ஸ்டர் மாளிகையில் ஐந்தாம் ஜார்ஜ் படையின் மரியாதை ஏற்றார்.
1914 - யுத்தம் சாரணர்கள் கடற்பகுதியையும், ஆகாயப் படை எடுப்பையும் பாதுகாத்து
வந்தனர்.
1916 - குருளையர் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1918 - ரோவர் (திரிசாரணர்) பகுதி ஆரம்பிக்கப்பட்டது.
1919 - கில்வெல் மைதானம் ஆரம்பிக்கப்பட்டது.
1920 - லண்டன் ஒலிம்பியாவில் முதலாம் உலக ஜம்பொறி ஆரம்பிக்கப்பட்டது.
நமது பேடன் பவல் தலைமைச் சாரணன் என்று பிரகடனம் செய்யப்பட்டார்.
1929 - மூன்றாம் உலக ஜம்பொறி.
1931 - முதலாம் உலக றோவர் மூட்.
1935 - இரண்டாம் உலக றோவர் மூட்.
1937 - ஐந்தாம் உலக ஜம்பொறி.
1939 - மூன்றாம் உலக றோவர் மூட்.
1941 - ஜனவரி 8 இல் பேடன் பவல் இறந்தார்.
ஜனவரி 29 இல் லார்ட் நோமர்ஸ் தலைமைச்சாரணராக்கப்பட்டார்.
1944 - லார்ட் நோமர்ஸ் இறந்தார்.
1945 - பெப்ரவரி 22 இல் லார்ட் ரோவலன் தலைமைச் சாரணரானார்.
1947 - ஆறாம் உலக ஜம்பொறி.
1949 - நான்காம் றோவர் மூட்.
1951 - ஏழாம் உலக ஜம்பொறி.
1952 - தென்கிழக்காசியாவின் பாசறை கோலாலம்பூரில் நடைபெற்றது.
1957 - முதல் உலக சாரணத் தலைவர்கள் சந்திப்பு – கில்வெல்.
1957 - சாரணர் பொன்விழா.

Wednesday, October 14, 2009

சாரணர் விதிகள்



சாரணர் விதிகள்

1. சாரணன் நம்பத்தகுந்தவன்.
2. சாரணன் பற்றுறுதி; உடையவன்.
3. சாரணன் நேசமும் மரியாதையும் உடையவன்.
4. சாரணன் மற்ற எந்தச் சாரணனுக்கும் சகோதரன்.
5. சாரணன் தைரியமுள்ளவன்.
6. சாரணன் பிராணிகளின் தோழன்.
7. சாரணன் ஒத்துழைப்பவன்.
8. சாரணன் மகிழ்ச்சி உடையவன்.
9. சாரணன் சிக்கனமானவன.;
10. சாரணன் சிந்தனை, சொல், செயலில் தூய்மையானவன்.

Camporee 2009

Tuesday, October 13, 2009

சாரணர் பாடல் 1(ஆங்கிலம்)

Ging gang guli

Ging gang guli, guli, guli, guli
Watcha gin gan go, gin gan go//
Hela, hela – shela, hela shela he laho.
Shelawali, shelawali, shelawali, shelawali
Womba, womba, womba, womba……………..

திருகோணமலை கம்போறி 2009


01.10.2009 தொடக்கம் 05.10.2009 வரை திருகோனமலையில் கம்போறி 2009 நடைபெற்றது. அதில் வடக்க கிழக்கு மாகாகங்களில் இருந்து 590 சாரணர்கள் கலந்து கொன்டனர். இந்த கம்போறியினை 7வது திருமலையின் முன்னாள் சாரணத்தலைவரும் இன்னாள் உதவி மாவட்ட ஆணையாளருமான பூ.உதயகுமார் பொறுப்பேற்று நடாத்தினார். இக் கம்போறியில் நடந்த போட்டிகளில் 7வது சாரணர் குழு பல பரிசில்களை பெற்றுக்கொன்டது.அவை வருமாறு நிலைக்காட்சி, தனிநபர் சிறப்பு வெளிப்பாடு, சிறந்த சாரணர், சாரணத்தலைவருக்கான கையேட்டுக்கான விருது, சிறந்த சமூக சேவையாளர் விருது 2009, வேலைவாரம் 2009 கூடிய தொகை சேர்புக்கான விருது (83000/=), திருகோனமலை சிறந்த துருப்பு 2009 விருது, கம்போறியில் சிறந்த துருப்பு ஆகிய விருதுகளை பெற்றுக்கொன்டு கம்போறியில் முதலாமிடத்தை பெற்றுக்கொன்டது.


இந்நேரத்தில் எமது இவ்வெற்றிக்கு தோழோடு தோழ் சேர்த்த எமது பழைய சாரணர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சாரணத்தலைவர்
சி. விவேகானந்தன்.