Thursday, October 15, 2009

இலங்கை சாரணிய வரலாறு




1912 - கிறிஸ்தவ கல்லூரி மாத்தளையி;ல் எப்.ஜீ.சற். ஸ்ரீபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
1915 - 248 சாரணர்கள்.
1917 - முதல் சாரணர் விழா – கவலக் குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெற்றது.
1918 - முதன் முதல் திரிசாரணக்குழு ஒன்று இலங்கையில் உருவாக்கப்பட்டது.
1919 - கோ. புறூக் எலியத் - இலங்கையின் பிரதம ஆணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். பேடன் பவல் பிரபுவும் அவரது பாரியாரும் இலங்கைக்கு முதல் தடவை விஜயம் செய்தனர்.
1924 - இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சாரணர் இயக்கம் புகுத்தப்பட்டது.
1925 - வேணன் கிறேனியர் என்பவர் பிரதம ஆணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1930 - திரு.ஜே.எச்.டி. சேரம் என்பவர் பிரதம ஆணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1931 - களுத்துறை சாரணி கொல்னி ஆரம்பம்.
1934 - பேடன் பவல் இரண்டாம் தடவை இலங்கைக்கு வருகை.
1939 - முதலாவது கொழும்புத் துறைமுக திரிசாரணர்களுக்காக ஜேபைமார்க்கா ஞாபகார்த்தக் கட்டிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
1941 - வாவித்தெரு, காலிமுகத்திலுள்ள உறாஜி அப்துல் உறறீம் கட்டிடமும் அத்துடன் கூடிய உறபிற்றர் ஞாபகார்த்தக் கட்டிடமும் கொழும்புப் பகுதி சாரணியின் தலமைப்பீடமாக்கப்பட்டது.
1942 - சாரணரின் பயிற்சிக் கூடம் இராணுவத்தினரால் எடுக்கப்படவே, பயிற்சிக் கூடம்
மீரிகமவிற்கு மாற்றப்பட்டது.
1943 - கே. சோமசுந்தரம் சி.சி.எஸ். அவர்கள் பிரதம ஆணை அதிகாரியாக
நியமிக்கப்பட்டார்.
1945 - தேசிய தலைமைச் செயலகம் தற்போதைய கட்டிடத்திற்கு வந்தது. வெளிக்கள ஆணையாளர்கள் சேவை ஆரம்பம்.
1949 - கேணல் சி.வி. ஜெயவர்த்தன ஓ.பி.இ. பிரதம ஆணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1951 - இலங்கைச் சாரணரின் கணக்கெடுப்பு 9,348.
1957 - இங்கிலாந்து உலக சம்மேளனத்திலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்திலும் அங்கத்துவம் பெற்றது.
1962 - தேசிய ஜம்பொறி குதிரைப்பந்தயத்திடல், கொழும்பு.
1972 - தேசிய பொன்விழா – கண்டி போகம்பர மைதானம்.
1983 - மூன்றாவது தேசிய ஜம்பொறி – அனுராதபுரம்.
1987 - றெக்ஸ் ஜயசிங்க பிரதம ஆணையாளர்.
1990- முதலாவது சார்க் நாடுகளுக்கிடையிலான ஜம்பொறி விகாரமகாதேவி பூங்கா,கொழும்பு.
1992 - நான்காவது தேசிய ஜம்பொறி – குருணாகலை
1994 - எம்.எம். மொகைதீன் பிரதம ஆணையாளர்.
1997 - எம்.எம். மொகைதீன் காலமானார்.கே.எச். கமிலஸ் பெர்ணான்டோ பிரதம ஆணையாளர்.
1998 - ஐந்தாவது தேசிய ஜம்பொறி பல்லேகல – கண்டி.சுமார் 5500 சாரணர்கள்.

No comments:

Post a Comment